பிரித்தானிய இளவரசர் அன்ரூ, அமெரிக்காவில் ஒரு செக்ஸ் வழக்கில் சிக்கியுள்ளார். அவர் இளமையாக இருந்த காலத்தில், வேர்ஜீனியா என்ற 17 வயதுப் பெண்ணோடு உறவில் இருந்துள்ளார். அவர் வேர்ஜீனியாவை இடுப்பில் கை வைத்து கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கும் படம் இன்ரர் நெட்டில், வெளியாகி இருந்தது. அதன் ஒரிஜினல் படத்தை வேர்ஜீனியா வைத்திருந்தார். அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் இருந்தார். ஆனால் அந்த ஒரிஜினல் புகைப்படத்தை தற்போது காணவில்லை என்று வேர்ஜீனியா தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் கவனமாக அவர் அதனை பாதுகாத்து வந்தார். ஆனால் அது தற்போது மாயமாக மறைந்துவிட்டது. இதன் பின்னணியில்…
பிரித்தானிய அரச குடும்பம் உள்ளதாக அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார். அரச குடும்பம் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனூடாக பெரும் ஆதாரம் ஒன்றை வேர்ஜினியா இழந்துள்ளார்.