“ஆஹா… சம்மு.. வேற லெவலு…” – இணையத்தை திணறடிக்கும் சமந்தாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

நடிகை சமந்தா ( Samantha ) அழகின் உருவமாய் வண்ணப்பறவைகளுடன் அமர்ந்திருக்கும் சகுந்தலாவின் முதல்பார்வை போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது..நடிகை சமந்தா (Samantha), தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது கேரியர் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

திருமண வாழ்க்கையில் சமந்தா தோல்வியை சந்தித்தாலும், திரை துறையில் யாராலும் ஒளித்துவைக்க முடியாத வைரம் போல் ஜொலிக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமந்தா நடித்து வரும் ‘சகுந்தலம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ருத்ரமாதேவி உள்ளிட்ட படங்களை இயக்கிய குணசேகர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

புராண கதையான சகுந்தலையின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. சகுந்தலை வேடத்தில் சமந்தா நடிக்கிறார். முதல் பார்வை போஸ்டரில் வனம் ஒன்றில் மான்கள் மற்றும் பறவைகள் சூழ வெள்ளை உடையில் சமந்தா அமர்ந்திருக்கிறார்.

புராணத்தில் இடம்பெற்ற சகுந்தலையின் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. மணிஷர்மா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். நீலிமா குணா இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள், சம்மூ..வேற லெவலு.. என்று சிலாகித்து வருகின்றனர்.

Below Post Ad

Tags