யாழ்., மாவிட்டபுரத்திலுள்ள பாதுகாப்பான ரயில் கடவையில் ரயிலுடன் மோதி நபர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் ரயில் வருவதற்காக கடவை மூடப்பட்டிருந்த நிலையில் அறியாமையால் மோட்டார் சைக்கிளில் பயணிக்க முற்பட்ட வேளையே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் சாந்தை – பண்டத்தரிப்புப் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.