ஹாங்காங்கில் இந்த மாத தொடக்கத்தில் தினசரி உறுதி செய்யப்படும் கொரோனா தொற்று எண்ணிக்கை 100 க்கும் குறைவாக இருந்தது. ஆனால், இரண்டு வாரங்களில் அந்த எண்ணிக்கை 40 மடங்காக உயர்ந்து, நாட்டில் தற்போது வரை இல்லாத அளவிற்கு கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது.
இதற்கு, மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயங்குவது தான் முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டு நோயாளிகள் கடுமையான குளிரில், வெளியில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.