மாலி நாட்டில் உள்நாட்டுப் போர் நடக்கிறது. அந்நாட்டில் மத போராளிகளுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த படை வீரர்கள் போரில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் பிரான்ஸ் அரசு தங்கள் துருப்புகளை அந்நாட்டிலிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து பிரசல்ஸ் நகரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பு-ஆப்பிரிக்கா மாநாட்டிற்கு முன்பாக அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அதில், ‘‘மாலி நாட்டிலிருந்து பிரான்ஸ் துருப்புகள் திரும்ப பெறப்படுகின்றன. இது ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும், கனடாவிற்கும் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட விலகல் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், சஹேலில் தீவிரவாதத்தை எதிர்த்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.