ஐ.நா. சபையில் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம், நிதியுதவி அளித்து வருவதால் தீவிரவாதிகள் அதன் ஆதரவுடன் சதி திட்டங்களை அரங்கேற்றி வருவதாகவும் இந்தியா குறை கூறியுள்ளது. ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹரர் தெற்காசிய நாடுகள் தொடர்பான மாநாட்டில் உரை நிகழ்த்தியபோது, பாகிஸ்தான் நாடே தீவிரவாதத்தின் மையப்பகுதியாக விளங்குவதாக குறிப்பிட்டு கூறியுள்ளார்.
மேலும் புல்வாமா தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் இறந்ததை சுட்டிக்காட்டி அவர்களை கொன்ற தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள் என்பது உலகிற்கே தெரியும் எனவும், மும்பை தாக்குதல் போன்ற சம்பவங்களை கூறியும் பாகிஸ்தான் ட்ரோன்களை பயன்படுத்தி எல்லை தாண்டி ஆயுதங்களையும், போதைப்பொருட்களையும் கடத்தி வருவதை கண்டித்துள்ளார்.