உக்கிரைன் நாட்டின் மீது பறந்த பல சர்வதேச விமானங்கள் தமது சேவைகளை நிறுத்தியுள்ளது. பல உலக நாடுகளில் இருந்து உக்கிரைனுக்கு விமான சேவைகள் ரத்தாகியுள்ள நிலையில். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த சகல கோரிக்கைகளையும் புட்டின் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன் நிலையில் சூனியப் பிரதேசமாக முழு உக்கிரைனும் மாறியுள்ளது. வரும் புதன் கிழமை தாக்குதலை ஆரம்பிக்க புட்டின் உத்தவுகளை கொடுத்துள்ளதாக ரகசிய புலனாய்வு தகவல் ஒன்று ஏற்கனவே வெளியாகி இருந்தது. எனவே அன்றைய தினம் ரஷ்யா தாக்குதலை தொடங்காது என்று கூறலாம். ஆனால் நிச்சயம் தாக்கும் என்று கூறுகிறார்கள். சங்கதி சாக்கில்…
தாம் புதிதாக தயாரித்துள்ள ஏவுகணைகள், பீரங்கிகள் எந்த அளவு துல்லியமாக வேலை செய்கிறது என்று பரிசோதனை செய்ய நல்லதொரு களம் தான் உக்கிரைன். அதனால் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் ஆயுதங்களை அள்ளி வழங்கி வருகிறது. எனவே போர் என்று ஆரம்பித்தால், ஆள் அணிப் படைகளை விட, துல்லியமான அதி நவீன தாக்குதல் தளபாடங்கள் யாரிடம் அதிகம் உள்ளதோ அவர்களே வெற்றியடைவார்கள் என்பது நிச்சயம்.