உக்ரைன் நாட்டின் எல்லைக்கு அருகில் குவிக்கப்பட்ட போர் விமானங்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக தெரியவந்திருக்கிறது. ரஷ்ய நாட்டின் போர் படைகள், உக்ரைன் நாட்டிற்கு அருகில் இருக்கும் பெலாரஸ், கிரைமியா மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளில் குவிக்கப்பட்டிருக்கின்றன.
இதனால், போர் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியில் இருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன. மக்சார் செயற்கைக்கோள் நிறுவனத்தின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், கடந்த ஒரே நாளில், உக்ரைனின் எல்லைக்கு அருகில் இருக்கும் தெற்கு பெலாரஸ் மற்றும் ரஷ்யாவின் மேற்கு பகுதிகளில் குவிக்கப்பட்ட போர் விமானங்கள் தெரிகிறது.
தெற்கு பெலாரஸ் மாகாணத்தின் மோசிர் நகரில் இருக்கும் சிறிய விமானநிலையத்தில் 100-க்கு அதிகமாகவும், டஜன் கணக்கிலும் துருப்புக் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த விமானநிலையமானது, உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் குறைந்த தூரத்தில் இருக்கிறது.
மேலும், இந்த புகைப்படங்களில், ரஷ்யாவின் போசெப் பகுதியில் ராணுவ முகாம் அமைக்க, மிகப்பெரிய நிலப்பரப்பு அழிக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது.