உக்ரைன் விவகாரம்…. ரஷ்யாவின் திடீர் அறிவிப்பு…. கூட்டப்பட்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்….!!!

உக்ரைன் விவாகரத்தில் ரஷ்யா அதிபர் புதின், திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் உள்ளிட்ட மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பினை அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் இந்த திடீர் அறிவிப்பை தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அவசர கூட்டத்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதன்படி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் உக்ரைன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையை ஏற்று இன்று அவசர கூட்டத்தை நடத்தியது. இதனையடுத்து இக்கூட்டத்தின் முடிவில் ஐ.நா சபை தலைவர் ஆண்டனியோ குட்ரெஸ் கூறியதாவது, ரஷ்யாவின் இந்த முடிவு உக்ரைன் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவற்றை மீறுவதாகும். மேலும் இந்த முடிவு ஐக்கிய நாடுகளின் சாசன கொள்கைகளுக்கு முரணானது.

மேலும் பேசிய அவர்,2202 (2015) என்ற தீர்மானத்தில் பாதுகாப்பு கவுன்சில் அங்கீகரித்த ‘மின்ஸ்க்’ ஒப்பந்தங்களின் படி, கிழக்கு உக்ரைனில் நிலவும் மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படவேண்டும் என்று கூறினார். மேலும் உக்ரைன் நாட்டின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இறையாண்மை, ஒற்றுமை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு முழுமையான முறையில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தொடர்புடைய பொது சபை தீர்மானங்களுக்கு இணங்க, ஆதரவளிப்பதாக ஐ.நா சபை தலைவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்று நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad