2 பிள்ளைகளின் தாயாரான 41 வயதான குறித்த வர்த்தகரின் மனைவிக்கும் யாழில் உள்ள பிரதேசசெயலகம் ஒன்றில் கடமையாற்றும் 27 வயதான திருமணமாகாத இளைஞன் ஒருவருக்கும் இடையில் கள்ளத் தொடர்பு இருப்பதாக வர்த்தகர் சந்தேகிப்பதாகவும் அதன் அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை முடக்கிவிட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.
மனைவி காணாமல் போன மறு நாள் பொலிசார் இளைஞன் கடமையாற்றும் பிரதேசசெயலகத்தில் சிவில் உடையில் இளைஞனைச் சந்தித்துச் சென்றுள்ளார்கள். அதன் பின்னர் இளைஞனை விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே இளைஞன் வர்த்தகரின் மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பின் அங்கு நின்ற பொலிசாருக்கு வர்த்தகரின் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
தான் கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற முயல்வதாகவும் தனது கணவன் கடும் சந்தேகப் பேர்வழி எனவும் அத்துடன் தன்னை இரவில் அடித்துத் துன்புறுத்துவதாகவும் அதனாலேயே தான் வர்த்தகரிடமிருந்து பிரிந்து சென்றுள்ளதாகவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் வர்த்தகருக்கு பொலிஸ் மேலிடத்தில் உள்ள செல்வாக்கு காரணமாக பொலிசார் மனைவியைக் காணவில்லை என்ற கோணத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனராம். என்ன நடந்திருந்தாலும் நேரடியாக பொலிஸ் நிலையத்துக்கு வந்து விளக்கத்தைத் தருமாறு மனைவிக்கு பொலிசார் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.