நடந்து முடிந்த தமிழக உள்ளூராட்சி தேர்தலில், ஒரு கவனிக்க தக்க விடையம் நடந்துள்ளது. இதனை வேடிக்கை என்பதா இல்லை விபரீதம் என்பதா இல்லை சோகம் என்பதா புரியவில்லை. சில மாவட்டங்களில் போட்டியிட்ட அதிமுக, அமமுக போன்ற கட்சிகளின் உறுப்பினர்களுக்கு, அந்த வார்டில் ஒரு வாக்கு கூட விழாத பலர் இருக்கிறார்கள் என்பது தான் அந்த உண்மை. ஆம் போட்டியிட்ட பல நபர்களுக்கு 1 வாக்கு கூட விழவில்லை. அது எப்படி ? போட்டியிட்ட நபருக்கு அக்கா, தம்பி, அப்பா அம்மா இல்லையா ? குறைந்த பட்சம் ஒரு நண்பர் கூடவா இல்லை ? அது எல்லாம் போகட்டும் , போட்டியிட்ட நபர் சென்று தனக்கு தானே வாக்களித்தால் கூட, அவருக்கு ஒரு வோட்டு வந்திருக்குமே… அதுவும் இல்லை. இந்த வேட்பாளர்கள் பலர் தமக்கு தாமே வாக்கு போடுவது இல்லை. இவர்கள் யாரையாவது தலைவர் என்று சொல்லிக் கொண்டு அலைவார்கள். அவர்களுக்கு தான் சென்று…
வாக்கும் போடுவார்கள். இவ்வாறு தோற்றுப் போன நபர்கள் பலர் உள்ளார்கள். சொந்த அப்பா அம்மா வே போட்டியிடும் தனது மகனுக்கு வாக்குப் போடாமல் தி.மு.கா அணிக்கு வாக்குகளை போட்டுள்ளார்கள். இதனை விட அவமானம் வேறு எதுவுமாக இருக்க முடியாது போங்கள்.