விவாகரத்தான நடிகருடன்… ஆள் இல்லாத தீவில்… பிரபல தொகுப்பாளினி கிலிகிலி பிலிபிலி …!

வெள்ளை குதிரை என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தொகுப்பாளினி கம் சினிமா நடிகையான அம்மணி தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருந்த போது திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

ஆனால், அவரது திருமண வாழக்கை நீண்ட காலம் தொடரவில்லை. திருமணம் ஆன வேகத்தில் விவாகரத்தும் வாங்கி கொண்டு சுதந்திர பறவையாக ஊர் சுற்றி.. இல்லை இல்லை… உலகம் சுற்றி வருகிறார் அம்மணி.

மேலும், இன்றைய இளம் நடிகர்கள் சிலருடனும் கிசுகிசுக்கப்படும் அம்மணி தற்போது தனித்தீவு ஒன்றில் பிரபல நடிகருடன் காதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது.

கடந்த ஆண்டு விவாகரத்தான பேய்த்தனமான நடிகருக்கும், வெள்ளைக்குதிரைக்கும் இடையே பல விவகாரங்கள் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவதும்.. ஆனால்,.. வெளியான சில நாட்களிலேயே அந்த செய்திகள் காற்றோடு கலந்து விடுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

ஆனால்.. அப்படி காற்றில் கலந்து அத்தனையும் உண்மை தான் சாமியோவ்.. என்பது போல இந்த காதல் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. வெள்ளைக்குதிரை தனது காதலை சுதந்திரமாக கொண்டாடி வரும் தீவு தமிழ் சினிமாவில் உச்ச நடிகை என்று சொல்லப்படும் அந்த நடிகையின் சொந்த தீவாம்.

உச்ச நடிகையின் உற்ற தோழியான வெள்ளைக்குதிரை தான் தற்போது அந்த தீவின் உரிமையாளர் போல நடிகருடன் காதல்கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறாராம். இதனை அறிந்த ரசிகர்கள்..இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ.. என்று நமட்டு சிரிப்பு சிரித்து வருகிறார்கள்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad