இலங்கையைச் சேர்ந்த பெண் மனித உரிமை வக்கீலான அம்பிகா சற்குருநாதன். இவர் கடந்த 27ஆம் தேதியன்று இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு சாட்சியமளித்துள்ளார். இது குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 4ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பிகா சற்குருநாதன் சாட்சியம் தவறாக வழி நடத்துவதாகவும், விடுதலைப்புலிகள் பிரச்சாரத்தை போல சமூகங்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் இந்த அறிக்கைக்கு சர்வதேச பொது மன்னிப்பு சபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட 8 சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.இது குறித்து அந்த அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அரசின் கருத்து அம்பிகா சற்குணநாதனை அச்சுறுத்துவதாகவும் , துன்புறுத்துவதாகவும் இருக்கிறது. மேலும் இலங்கை நிலை பற்றி துல்லியமாக, துணிச்சலாக சாட்சியமளித்த மனித உரிமைகள் பாதுகாவலர் அம்பிகா சர்குனநாதனுக்கு எங்களின் முழு ஆதரவை அளிக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.