” தனியாக நின்ற இளம் பெண்ணை பார்த்து ..”ஒரு போலீஸ்காரர் பண்ண வேலைய பாருங்க.

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக 38 வயதான சுப்பிரமணி என்பவர் பணிபுரிந்து வந்தார் . அவர் தினமும் மாலை நேரத்தில் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக ரோந்து வருவது வழக்கம் ,அதன்படி சில நாள் முன்பு மாலை நேரத்தில் அவர் ரோந்து வரும்போது,

வெள்ளியம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அவர், சாலையில் யாருமில்லாததால் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்துவதுபோல் நைசாக பேச்சுக்கொடுத்தார்.பிறகு அவரின் செல்போன் நம்பரை வாங்கி கொண்டார் .
அதன் பின்னர் அன்று இரவு அந்த இளம் கல்லூரி மாணவிக்கு போன் செய்து தன்னை தனியாக சந்திக்க இரு இடத்திற்கு வர சொன்னார்.

அதை கேட்டு அதிர்ச்சியான அந்த பெண், இது பற்றி தன்னுடைய உறவினர்களிடம் கூறினார் .பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு அந்த போலீஸ்காரர் வர சொன்ன இடத்திற்கு சென்றனர் .அப்போது அந்த பெண்ணை மட்டும் அந்த போலீசை சந்திக்க சொல்லிவிட்டு, அவர்கள் அனைவரும் அங்கு ஒளிந்திருந்தனர் .பின்னர் சொன்னபடி அந்த போலீஸ் அந்த இடத்திற்கு வந்து அங்கு இருந்த அந்த பெண்ணிடம் பேசியபோது, அங்கு ஒளிந்திருந்த பொது மக்கள் அந்த போலீசை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸ் உயரதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் .உயர் அதிகாரிகள் அந்த போலீஸ்காரர் சுப்ரமணி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad