முல்லைத்தீவு மாவட்டம் ஜயன்கன்குளம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட ஜயன்கன்குளம் பகுதியில் ஒன்றரை வயது குழந்தை ஒன்றை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சிறுவன் ஒருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஜயன்கன் குளம் கிராமத்தில் உறவுமுறையான 14 வயதுடைய சிறுவன், ஒன்றரை வயது குழந்தை ஒன்றினை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலீசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து குழந்தை மீட்கப்பட்டு மல்லாவி ஆதார மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 14 அகவை சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையினை ஜயன்கன்குளம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
குறித்த பகுதியில் வசித்துவரும் சிறுவன் சிறுமி துஸ்பிரயோகம் தொடர்பில் ஏற்கனவேமுறைப்பாடுகள் சில கிடைக்கப்பெற்றுள்ளதுடன் பெற்றோரின் சரியான கவனிப்பற்ற காண்காணிப்புக்களே இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமாக அமைகின்றது.
எனவே பெற்றோர்கள் உங்கள் சிறுவர்கள் தொடர்பில் சிறுமிகள் தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுங்கள் கண்காணியுங்கள் எச்சரிக்கையுடன் செயற்படுங்கள்.