யாழில் மதுபான விடுதியில் கொலை; அதிரவைக்கும் சிசிரிவி காணொளி வெளியீடு


மதுபான விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட கைகலப்பில் போத்தல் குத்துக்கு இலக்காகிய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் வல்லையில் உள்ள மதுபான விற்பனையுள்ள விடுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் திக்கம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த ஞானசேகரம் குணசோதி (வயது- 25) என்பவரே கொலை செய்யப்பட்டார்.

குறித்த மதுபான விற்பனை நிலையத்துக்கு கொல்லப்பட்டவர் உள்பட நால்வர் வருகை தந்துள்ளனர். அங்கு இருந்தவர்களுடன் கொல்லப்படவருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அது கைகலப்பாக மாறியுள்ளது.

கைகலப்பில் ஒருவருக்கு போத்தலால் சரமாரியாக குத்தப்பட்டுள்ளது. அவர் எழுந்து வெளியில் சென்று நிலத்தில் சரிந்துள்ளார்.

அதனால் அவரை உடனடியாக மந்திகை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

கொலை செய்த நெல்லியடியைச் சேர்ந்தவர் உள்பட சகாக்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் தேடி வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் மந்திகை ஆதார மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad