யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பஜிபரன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 33 வயது இளைஞனே நைலேன் கயிற்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் கொழும்பில் அன்றாட வேலை ஒன்றினை செய்து வந்ததாகவும் தற்போதய சூழ்நிலையில் போதிய வருமானம் இல்லாமல் குடும்பத்தில் பிணக்குகள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.
கடந்த சில நாட்களாக மனவேதனையில் புலம்பி திரிந்ததாகவும் பலர் ஆறுதல் சொல்லியும் இன்று தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.