நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத் திரையுலகில் சமீப காலமாக பாலியல் குற்றச் சம்பவங்கள், அது தொடர்பான புகார்கள் எழுந்து வருகிறது. இந்த வரிசையில் புதுமுக நடிகை தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் பாபு க்கு எதிராக பாலியல் புகார் கொடுத்திருந்தார். தன்னை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் கூறியிருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் விஜய் பாபுவுக்கு கேரள நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஜூன் 22 முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் அதே நேரத்தில் போலீஸ் கைது செய்தால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அடிப்படையில் விசாரணைக்காக விஜய் பாபு எர்ணாகுளம் தெற்கு காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது, பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர், விஜய்பாபு குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டதால் அவரை கைது செய்ததாக போலீசார் விளக்கம் அளித்தனர். மேலும் இது குறித்து தெரிவித்த கொச்சி துணை போலீஸ் கமிஷனர் குரியாக்ககோர்ஸ், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். நடிகை பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறிய அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஹோட்டல் அறைகளுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அன்று மாலையே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
வரும் ஜூலை 3ஆம் தேதி வரை விஜய்பாபு நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது விஜய்பாபு கொச்சியில் மட்டுமல்ல கொச்சியில் உள்ள சில ஓட்டல்களில் அறையெடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை குற்றம்சாட்டியுள்ளார். அதனடிப்படையில் விசாரணை நடைபெற உள்ளது. நடிகை பலாத்காரம் செய்யப்ட்டதாக கூறிய ஹோட்டல் அறைகளுக்குச் சென்று விஜய் பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அதேநேரத்தில் விஜய் பாபுக்கு ஆண்மை பரிசோதனை செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அதாவது இன்று அல்லது நாளை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆண்மைபரி சோதனை செய்யப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொச்சியில் நடந்த மலையாள நடிகர்கள் சங்க கூட்டத்தில் விஜய் பாபு கலந்து கொண்டார். அப்போது அவருக்கு அங்கு இருந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான விஜய்பாபுவை கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதித்ததே தவறு என்றும் நடிகர்கள் ஆவேசம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடதக்கது.