மாற்றாந்தாயின் துன்புறுத்தல்கள் தாங்க முடியாமல் வவுனியா நெடுங்கேணியில் இருந்து மட்டக்களப்பு வாழைச்சேனைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த 14 வயதான சிறுவன் கெப்பிட்டிக்கொலாவ பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா கெபிட்டிக்கொலாவ பிரதான வீதியின் புளியங்குளம் காட்டுப் பகுதியில் சிறுவன் ஒருவர் தனித்து துவிச்சக்கரவண்டியில் செல்வதை பிரதேசவாசிகள் அவதானித்து, சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாரிற்கு தகவல் தெரிவித்தனர்.
பொலிசார் சிறுவனை மீட்டு, நடந்த சம்பவம் குறித்து கேட்டபோது, நெடுங்கேணியிலுள்ள மாற்றாந்தாயின் கொடுமை தாங்க முடியாமல், மட்டக்களப்பு, வாழைச்சேனையிலுள்ள தாயாரிடம் துவிச்சக்கர வண்டியில் புறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நெடுங்கேணியில் இருந்து வாழைச்சேனை சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.