யாழில் பேருந்தில் பயணித்த 21 வயது இளைஞர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நொக்கி பயணித்த பேருந்திலேயே இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்தில் பயணித்த இளைஞன் பருத்தித்துறை முதலாம் கட்டை சந்தி நிறுத்தத்தில் இறங்கியபோது மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளை அங்கு இளைஞர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பொலிஸார் இளைஞனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.