இன்றைய ராசிபலன் – 31/07/2022, விருச்சிக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள்

இன்றைய பஞ்சாங்கம்

31-07-2022, ஆடி 15, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி பின்இரவு 04.18 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. மகம் நட்சத்திரம் பகல் 02.20 வரை பின்பு பூரம். மரணயோகம் பகல் 02.20 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. ஸ்வர்ண கௌரி விரதம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

இன்றைய ராசிபலன் – 31.07.2022

மேஷம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எடுத்த காரியம் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வகையில் உதவிகள் கிட்டும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் சற்று பலவீனமாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிறமொழியை சேர்ந்தவர்களால் எதிர்பாராத உதவி கிடைக்கும்.

மிதுனம்

இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.

கடகம்

இன்று உடல் நிலையில் சற்று மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

சிம்மம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். சிலருக்கு ஆடம்பர பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.

கன்னி

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

துலாம்

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையும். தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று நீங்கள் மனமகிழ்ச்சி அடைவீர்கள், ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள், உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.

தனுசு

இன்று உங்களுக்கு நிம்மதியின்மையும் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி சிறு தடங்கலுக்கு பின் கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். எதிலும் நிதானம் தேவை.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பது அல்லது மற்றவர் வாங்கும் கடனுக்கு முன்ஜாமீன் தருவது போன்ற செயல்களை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.

கும்பம்

இன்று உங்களுக்கு மன அமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலப் பலன் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் சீராகும். சுப செலவுகள் உண்டாகும்.

more news… visit here
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad