யாழ்.வல்வெட்டித்துறை கடற்பகுதி ஊடாக அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த 4 பேர் இன்று அதிகாலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொண்டமனாறு பகுதியில் வைத்து இன்று அதிகாலை 1 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினால் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வவுனியா மற்றும் திருகோணமலையை சேர்ந்த தலா இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொண்டமனாறு பகுதியில் இன்று அதிகாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நால்வரையும் தடுத்து விசாரணை நடத்தியபோது, படகுமூலம் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டமை தெரியவந்தது. அவுஸ்திரேலியா அழைத்துச் செல்வதாற்காக தலா 3 லட்சம் ரூபாய் வீதம் பணம் செலுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.