நேற்று இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மீன் விற்றுவிட்டு நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மூதாட்டியை, அவரது வீட்டில் இறக்கி விடுவதாக கூறி, சிறுவன் தனது சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளான்.
பொன்னாலை காட்டுப்பகுதிக்கு மூதாட்டியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, கழுத்தை நெரித்து வன்புணர்விற்கு முயன்றுள்ளான்.
மூதாட்டி உடனடியாக சுதாகரித்து சிறுவனின் கையை கடித்ததுடன், சிறுவனின் பிடியிலிருந்து தப்பித்து, உதவிக்குரல் எழுப்பியுள்ளார். இதையடுத்து சிறுவன் அங்கிருந்து தப்பியோடினான்.