யாழ் வலிகாமம் பகுதியில் கணவரின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
நீண்ட வரிசையில் நின்று சிறுகச் சிறுக சேர்த்து வைத்த பெற்றோலில் 5 லீற்றர் பெற்றோலை மனைவி தனது அலுவலகத்தில் வேலை செய்யும் அதிகாரிக்கு கணவனுக்கு தெரியாமல் வீட்டுக்கு வரவழைத்து கொடுத்துள்ளார்.
இவ்வாறு பெற்றோல் கொடுத்து சுமார் 10 நாட்களின் பின்னரே சேகரித்து வைத்திருந்த பெற்றோல் போத்தில்களில் சில காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றுள்ளார் கணவர். இது தொடர்பாக மனைவியிடம் விசாரித்த போதே குறித்த பெற்றோல் தனது அதிகாரிக்கு அவசர தேவை நிமிர்த்தம் கொடுத்ததாக மனைவி கூறியுள்ளார்.
இதனால் கடுப்பான கணவன் மனைவியை கட்டையால் தலையில் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டு உடனடியாக அயலவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. கணவரும் யாழில் உள்ள முக்கிய அலுவலகம் ஒன்றில் உத்தியோகத்தராக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.