ஒரு கிழமையில் இரண்டு பேரை திருமணம் செய்த டீச்சரின் திருவிளையாடல்.

இலங்கையில் ஆசிரியை ஒருவர் தனது முதலாவது திருமணம் முடிவடைந்து, ஏழு நாட்களுக்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியையும், அவரது புதிய மணமகனையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

முதல் கணவரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டையடுத்து, கம்பளை பொலிஸார் இரண்டாவது திருமணத்தை பதிவு செய்து கொண்டிருந்த பதிவாளரிடம், தகவலை தெரிவித்து , திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

29 வயதான இந்த ஆசிரியை 8 வருடங்களாக காதலித்து வந்த நபரை கடந்த ஜூன் 23 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அதன்பின்னர் பெற்றோரின் விருப்பத்தின்படி , மாவனெல்லயைச் சேர்ந்த மணமகனுடன் இரண்டு வருடங்கள் பழகிய பின்னர் ஜூன் 30 ஆம் திகதி கம்பளையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் இரண்டாவது திருமணத்தை நிறுத்தி, மணமக்களையும் உறவினர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று, விசாரணை செய்தபோது மணப்பெண் முதல் கணவனை தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அஞ்சி மணப்பெண் அப்படி கூறிய போதும் முதலாவது கணவர் திருமண படங்களையும் திருமணப் பதிவு சான்றிதழையும் காட்டி தான் கூறியதை உறுதி செய்துள்ளார்.

இதையடுத்து இரண்டாவது கணவர் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப் போவதாக தெரிவித்து அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad