பண்டாரகம சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (30) பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் ஓய்வு அறையில் தீ பரவியதாகதெரிவிக்கபப்டுகின்றது.
எரிபொருள் பம்புகள் நிறுவப்பட்ட இடத்திற்கு அருகிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது, உடனடியாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் வரிசையில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன்போது ஹொரணை மாநகர சபையின் தீயணைப்புத் துறை அதிகாரிகள் வந்து தீயை முற்றாகக் கட்டுப்படுத்தினர்.
எனினும் தீயை அணைக்கும் முயற்சியில் பௌசர் சாரதி ஒருவரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.