வேறு ஒருத்தவன் கூட நிச்சயதார்த்தம் பண்ணுவியா.. காதலி துடிதுடிக்க கழுத்தறுத்து கொலை.!

மதுரை பொன்மேனியைச் சேர்ந்தவர் பாண்டி மகள் அபர்ணா (19). பிளஸ் 2 படித்துள்ளார். இவர் நேற்று மாலை  தனியாக இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் அபர்ணாவின் கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றார். 

காதலித்த பெண்ணிற்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதால் ஆத்திரத்தில் இருந்த காதலன் காதலியை துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை பொன்மேனியைச் சேர்ந்தவர் பாண்டி மகள் அபர்ணா (19). பிளஸ் 2 படித்துள்ளார். இவர் நேற்று மாலை  தனியாக இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் அபர்ணாவின் கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அபர்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அபர்ணாவின் தந்தை பாண்டி அப்பகுதியில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். அபர்ணாவின் பாட்டி வீடு விராட்டிபத்தில் உள்ளது. அங்கு அடிக்கடி சென்றபோது வீட்டருகே உள்ள ஹரிஹரனை அபர்ணாவை சந்தித்து பேசியுள்ளார். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அபர்ணா வீட்டிற்கு ஹரிஹரன் பெண் கேட்டு சென்றுள்ளார். ஆனால், பெண் தர மறுத்து விட்டனர். இதனைத்தொடர்ந்து அபர்ணாவை உறவுக்கார பையனுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்து இதற்கான நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் இருவரின் திருமணம் நடைபெற இருந்தது.

இதையடுத்து அபர்ணாவை கடத்தி செல்ல ஹரிஹரன் முயன்றதாகவும், இதற்கு அவர் ஒத்துழைக்கவில்லையென தெரிகிறது. ஆத்திரமடைந்த ஹரிஹரன் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற  கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக தலைமறை வான ஹரிஹரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரையில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad