யாழ் பிரபல பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற மாணவி ஒருவர் நேற்று இரதவு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் அவருக்கு 3 பாடங்களுக்கும் ஏ சித்தி வரும் என பாடசாலை சமூகம் எதிர்ப்பார்த்திருந்தது.
ஆனால் அவருக்கு பெறுபேறு மிகவும் குறைந்து வந்துள்ளது. இதனால் பாடசாலையும் அதிர்ச்சி அடைந்ததுடன் இது தொடர்பாக மாணவியை பலரும் தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் தெரியவருகின்றது.
இந் நிலையில் குறித்த மாணவி தனது வீட்டில் உள்ள கிணற்றில் பாய்ந்தாாகவும் கிணற்றில் விழுவதை அவதானித்த தாயார் கத்தி குக்குரல் இட்ட போது அயலில் வசித்தவர்கள் கிணற்றுக்குள் பாய்ந்து மாணவியைக் காப்பாற்றியுள்ளதாகவும் தெரியவருகின்றது. கிணற்றில் விழுந்து காப்பாற்றப்பட்ட மாணவிக்கு தலையில் காயம் உள்ளதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.