யாழ் பண்டத்தரிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று பிற்பகல் (31) மேல்மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட CBA 8144 இலக்கமுடைய வைத்தியர்களின் குறியீடு பொறிக்கப்பட்ட weganR காரில் வந்த இருவர் தம்மை வரிசையில் முன்னுக்கு விடுமாறு அங்கு நின்ற கார் சாரதி சிலரை தூசண வார்த்தைகளால் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுகாதாரத்துறையினருக்கு அத்தியாவசிய சேவை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படுகின்ற போதும் எவ்வாறு இந்தக் கார் பொதுமக்களின் வரிசையில் வந்து அவர்களின் எரிபொருளையும் சுரண்டமுடியும் என மக்கள் குழப்பமடைந்தனர்.
ஆனாலும் அவர்களை பார்க்கும்போது சுகாதாரத்துறையில் பணிபுரிவதற்கான எந்த தகுதியும் காணப்படவில்லை.
காதில் தோடு, தாடி, வெற்றிலை போட்டு குதப்பி வீதி முழுவதும் துப்பியபடியே திரிந்ததை அவதானிக்கமுடிந்தது.
நாம் அறிந்தவரையில் கார் சுகாதாரத் துறை ஊழியர் (வைத்தியராக இருக்கலாம்) ஒருவருடையது, முச்சக்கரவண்டி வைத்திருந்து தற்போது எரிபொருள் பதுக்கலில் ஈடுபடும் இந்த இருவரும் கார் உரிமையாளரிடம் தரகு பணம் பணம்பெற்று அவரிற்கு எரிபொருள் நிரப்பி கொடுத்துள்ளனர்.
இப்படியான தொழில் யாழ்ப்பாணத்தில் தற்போது சூடு பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.