யாழில் ஏற்கனவே காதலனுடன் உறவு. ஏமாற்றப்பட்ட கனடா மாப்பிள்ளை.

தனது மனைவிக்கு திருமணத்திற்கு முந்தைய பாலுறவு அனுபவம் உள்ளது என்ற சந்தேகத்தில் விவாகரத்து கோரி கணவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அண்மைக்காலமாக சில விவகாரத்து வழக்குகள் தொடர்பான செய்திகளை பிரசுரித்துள்ளோம். செய்திக் கவர்ச்சிக்காக அல்லாமல், சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிறழ்வுகளை சுட்டிக்காட்டவும், மனிதர்கள் ஒவ்வொரு நடத்தையும் வாழ்க்கையிலும், சமூகத்திலும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை புரிய வைக்கவுமே இது தொடர்பான தகவல்களை வெளியிட்டு வருகிறோம்.

யாழ் மாவட்டத்திலுள்ள நீதிமன்றமொன்றில் மிக அண்மையாக தாக்கல் செய்யப்பட்டுள்ள விவாகரத்து வழக்கு ஒன்று தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கனடாவில் வதியும் இளைஞர் ஒருவர், சட்டத்தரணி ஊடாக யாழ் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றமொன்றில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

வடமராட்சி பகுதியை பூர்வீகமாக கொண்ட அந்த இளைஞன் குடும்பத்துடன் கனடாவில் வசிக்கிறார். கடந்த ஓரிரு வருடங்களின் முன்னர் பெற்றோர் இருவரும் சொந்த ஊருக்கு வந்து தங்கியுள்ளனர்.

தமது மகனிற்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, யாழ் நகரிலுள்ள திருமண சேவை நிறுவனம் ஒன்றின் ஊடாக, மணமகளொருவரை கண்டறிந்தனர்.

யாழ் நகருக்கு அருகிலுள்ள பகுதியொன்றை சேர்ந்த 24 வயதான யுவதிக்கும், 32 வயதான மணகனிற்கும், கடந்த 2 மாதங்களின் முன்னர் திருமணம் நிகழ்ந்தது.

திருமணத்தின் முன்னதாக சச்சரவொன்று ஏற்பட்டிருந்தது.

திருமணத்திற்கு முன்னதான சடங்கொன்று நடைபெறும் நாளில், மணமகளும், பிறிதொரு இளைஞனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் உள்ள சுவரொட்டியொன்று மணகனின் வீட்டு வாசலில் ஒட்டப்பட்டிருந்தது. இரவு வேளையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியை மறுநாள் காலையிலேயே உறவினர் ஒருவர் அவதானித்து தகவல் வழங்கியதால், உடனடியாக மணமகன் குடும்பத்தினர் அதை கிழித்து விட்டனர்.

மணமகளிற்கு காதல் விவகாரம் இருந்த விடயம் இதன் பின்னரே தெரிய வந்து, திருமணத்தில் சர்ச்சையேற்பட்டிருந்தது. எனினும், காதல் தொடர்பை பல மாதங்களின் முன்னரே யுவதி தவிர்த்து விட்டதாகவும், மணமகன் தொல்லை தருவதாகவும் மணமகள் தரப்பில் கூறப்பட்டு, இரு தரப்பிற்கிடையிலும் சமரசம் ஏற்பட்டு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்து இரண்டு வாரங்களில் கனடா திரும்பிய மணமகன், கனடா சென்று கிட்டத்தட்ட ஒரு மாதத்தில், தனது சட்டத்தரணி ஊடாக விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனது மனைவியின்நடத்தைகள், அவருக்கு திருமணத்தின் முன்னைய உறவு இருந்திருக்கலாம் என்ற வலுவான சந்தேகத்தை தனக்கு ஏற்படுத்தியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலமாக திருமணத்திற்கு முன்னர் இன்றய இளம் தலைமுறையினர் காதல் என்ற போதையில் செய்யத்தகாததை எல்லாம் செய்து முடித்து விடுகின்றனர். யாழ் நகரை அண்டிய விடுதிகள் மற்றும் கோட்டையிலும் கூட இவற்றை
அவதானிக்க கூடியதாக உள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு செல்வதாக வீட்டில் சொல்லி இவ்வாறான இடங்களில் வந்து அநாகரிக செயல்களை செய்கிறார்கள். பின் சில நாட்களின் பின் வெளிநாட்டு மாப்பிள்ளை என்றதும் அவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். பெரும்பாலும் வெளிநாட்டு மாப்பிள்ளை களுக்கு அணில் கொந்திய பழம் தான் கிடைக்கிறது. 

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad