இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் – காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கணவருடன் சென்ற குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்தார். காரைநகர் பாலத்தடியில் அவர்கள் பயணித்துக் கொண்டு இருந்தவேளை அவர் திடீரென தவறி விழுந்து தரையில் தலை அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஜெயந்தன் வேதப்பிரியா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.