யாழில் நாயைக் கொடூரமாகக் கொன்றவர்களின் பரபரபப்பு வாக்குமூலம்

போதைப்பொருளுக்கு அடிமையாகி ஊரில் திருட்டுக்குச் செல்லும் போது தம்மை பார்த்து குலைப்பதனால்தான் நாயைக் கொலை செய்ததாக சந்தேக நபர்களில் ஒருவர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

நாயை கைக்கோடாரியினால் வெடிக் கொலை செய்தவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அதனை காணொளி பதிவு செய்தவரே இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்யும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகியது.

புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 மற்றும் 35 வயதுடைய இருவர் நேற்றுமுன்தினம் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

நாயை வெட்டிக் கொல்லப் பயன்படுத்தி கைக்கோடாரி மற்றும் அதனை காணொளி எடுத்த அலைபேசி என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.

“போதைப்பொருளுக்கு அடிமையாகியதால் ஊரில் திருட்டுகளில் ஈடுபட்டோம். எம்மைக் கண்டவுடன் நாய் குலைத்து காட்டிக்கொடுத்துவிடும்.

இதனால் அங்கு இடம்பெறும் திருட்டுகளுடன் எமக்குத் தொடர்பு உண்டு என பொலிஸார் விசாரணைக்கு அழைப்பார்கள். அதனால்தான் அந்த நாயைக் கொலை செய்தோம்.

கைக்கோடாரியினால் வெட்டி கொலை செய்தவர் அன்றைய தினம் போதையில் இருந்தார். சில நாள்களுக்கு முன்பாகவே நாயை கொலை செய்துவிட்டோம்.

அதன் காணொளி சகோதரனின் அலைபேசியில் இருந்தது. அவர் தவறுதலாக ரிக்ரொக்கில் பதிவேற்றப்பட்டுவிட்டது” என்று காணொளி பதிவெடுத்தவர் விசாரணைகளில் தெரிவித்தார்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad