கிராம சேவகரின் பிறந்த நாள் பரிசாக பெற்றோல் வழங்கிய கிராம மக்களின் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தேவையறிந்த இளைஞர்களின் இப்பரிசு காலத்திற்கு பொருத்தமானது எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
J/363 கிராம சேவகர் ரதீசன் அவர்களின் பிறந்த நாள் நேற்று நடைபெற்றது. அவர் கடமைபுரியும் கிராம அலுவலக இளைஞர்களால் நாட்டில் அனைவரினதும் அத்தியாவசிய தேவையாக பெற்றோல் உள்ளது.
அவரின் சேவையை இடையூறின்றி நடாத்த காலத்தின் தேவையறிந்து பெற்றோல் வழங்கியுள்ளனர்.