சென்னை விமான நிலையத்தில் தளபதி விஜய் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் தற்போது ’வாரிசு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள பிரமாண்டமான செட்டில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்டமாக சென்னையில் நடைபெற்றது.
இந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் சென்றார்.
இதற்காக அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது, பயணிகளுடன் வரிசையில் நின்றது போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
#ThalapathyVijay at Chennai Airport.. Fitness..
to Vizag..#Varisu pic.twitter.com/fohLTmvK35
— Laxmi Kanth (@iammoviebuff007) July 31, 2022