யாழிலுள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் 4 பேர் போதையில் கைது!

யாழ்ப்பாணம், கொக்குவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்கள் நால்வர் மதுபானம் மற்றும் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நால்வரும் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண நகரிலுள்ள பிரபல தனியார் கல்வி நிறுவனமொன்றிற்கு கல்வி கற்க வந்த மாணவர்கள், பின்னர் பிறவுண் வீதி ஆலய கேணியடியில் மது அருந்தி, மாவா போதைப்பாக்கு பாவித்துள்ளனர்

போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மாணவர் ஒருவர் மாவா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நிலையில் கைது செய்தனர். ஏனைய மூவரும் மதுபானம் அருந்தியவாறு இருந்தனர்.

நால்வரை கைது செய்து யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.


தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு வருகை தந்ததாகவும் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மதுபானம் அருந்தியதாகவும் மாணவர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.

அவர்கள் க.பொ.த சாதாரணதரத்தை முடித்து தற்போது உயர்தரத்தில் கல்விபயிலும் 17, 18 வயதுடையவர்கள் என விசாரணையில் கண்டற்றியப்பட்டது. அவர்கள் கொக்குவில், கோண்டாவில் பகுதிகளை சேர்ந்தவர்கள்.

மாணவர்களின் பெற்றோரை அழைத்து மூத்த பொலிஸ் அத்தியட்சகர், பிள்ளைகள் தொடர்பில் கண்காணிப்பு இல்லையா என எச்சரித்தார்.

பாடசாலையில் பயிலும் மாணவர்களை நீதிமன்றில் முற்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதனால் ஏற்படும் பாதகநிலை தொடர்பில் எடுத்துரைத்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர் எச்சரித்து பெற்றோரிடம் மாணவர்களை ஒப்படைத்தார்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad