கிறீன்லேயர் சுற்றுச் சூழல் அமைப்பினால் விமர்சையாக கொண்டாடப்பட்ட "பசுமைப் புரவலர் விழா "

நீர்வேலியைத் தளமாகக் கொண்டு இயங்கும் Green layer சுற்றுச்சூழல் அமைப்பினால் ஓழுங்கு செய்யப்பட்ட பசுமைப் புரவலர் விழா 2022 நிகழ்வு 04.09.2022 அன்று கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் வாசலில் உள்ள 170 வருடமான மலைவேம்பின் கீழ் வைக்கப்பட்டிருந்த மரக்கன்றுகளிற்கு தரு வணக்கம் இடம்பெற்றது. 

மேற்படி தரு வணக்கத்தில் யாழ் மாவட்ட அரசஅதிபர் திரு மகேசன் அவர்களும்
 மேலதிக அரசஅதிபர் திரு.பிரதீபன் அவர்களும் யாழ்ப்பாணம் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.மு.இராதாகிருஸ்ணன் அவர்களும் மற்றும் பேராசிரியர்களான திரு.சண்முகலிங்கன் மற்றும் வணிகத்துறை பேராசிரியர் திரு. வேல்நம்பி பேராசிரியர் திரு.கிருஸ்ணராஜா அவர்களும் பெருந்தகைகளாக கலந்து சிறப்பித்தனர். Green layer சுற்றுச்சுழல் அமைப்பினால் 10000 மரக்கன்றுகளை நாட்டியமைக்காக நிறைவு விழாவும் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை புதிய இலக்காக நிர்ணயிக்கின்ற நிகழ்வில் 28 சுற்றுச்சுழல் சார்ந்த அமைப்புகளுக்கு Green Layer சுற்றுச்சூழல் அமைப்பினால் மேலும் அவர்கள் தொடர்ந்து மரநடுகையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்துடன் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.





Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad