யாழில் றுாம் எடுத்து வேறு யுவதியுடன் இரண்டாவது இரவு நடாத்திய பிரான்ஸ் மாப்பிளை!!

யாழில் கடந்த சில நாட்களுக்கு முதல் திருமணம் முடித்து மணமகள் வீட்டில் தங்கியிருந்த பிரான்ஸ் மாப்பிளை இன்னொரு யுவதியுடன் யாழில் உள்ள பிரபல விடுதியில் கையும் களவுமாக மணமகள் வீட்டாரால் பிடிக்கப்பட்டார். 

யாழ் மானிப்பாயைச் சேர்ந்த 27 வயதான பெண்ணை யாழ் பண்டத்தரிப்புப் பகுதியைச் சேர்ந்த பிரான்சில் வதிவிட அனுமதி பெற்று வசித்து வந்த 34 வயதான இளைஞன் கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் முடித்திருந்தார். 

திருமணம் முடித்து ஒரு கிழமைக்குள் தனது நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வேண்டும் என கூறி யாழில் உள்ள பிரபல விடுதியில் அறை ஒன்றை ஒழுங்கு செய்திருந்துள்ளார். குறித்த பார்ட்டிக்கு தானும் வருவதாக மனைவி கேட்ட போது அதற்கு மறுப்பு தெரிவித்த மாப்பிளை தனது நண்பர்கள் குடி போதையில் நிற்பார்கள். 

அதனால் தர்மசங்கடங்கள் ஏற்படும் என கூறி மனைவியை தவிர்த்து குறித்த விடுதிக்கு சென்றுள்ளார், இதே வேளை மாப்பிளைக்கு பெரிய அளவில் நண்பர்கள் இல்லை என மாப்பிளையின் தாயார் கூறியதால் சந்தேகமடைந்த மனைவி தனது தம்பியையும் அழைத்துக் கொண்டு குறித்த விடுதிக்கு இரவு 8 மணியளவில் சென்று விசாரித்துள்ளார், அதன் போது மாப்பிளையின் பெயரில் பதிவு செய்யப்பட்ட விடுதி அறைக்கு மனைவியும் தம்பியும் செல்ல முற்பட்ட போது விடுதி வரவேற்பாளர்கள் அனுமதிக்கவில்லை. 

அதே நேரம் மாப்பிளைக்கு உள்ளகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனைவி வந்திருப்பதை கூறியுள்ளார்கள். இதனால் சந்தேகமடைந்த மனைவியும் மனைவியின் தம்பியாரும் விடுதி ஊழியர்கள் மறிக்க மறிக்க மாப்பிளையின் அறைக்கு சென்றுள்ளனர். அங்கு மாப்பிளை அரை குறை ஆடையி்ல இன்னொரு யுவதியுடன் தங்கியிருந்ததை கண்டு பிடித்து கடும் வாக்குவாததில் ஈடுபட்டதாகத் தெரியவருகின்றது. 

விடுதி அறையில் இருந்து விளக்குகள் மற்றும் கண்ணாடி அலுமாரி என்பன உடையும் அளவுக்கு அங்கு சண்டை நடந்துள்ளது. இதன் பின்னர் மனைவி குறி்தத அறைக்குள் தற்கொலைக்கு முயன்றதாகவும் இதனையடுத்து அங்கு விரைந்த மனைவியின் உறவினர்களும் அங்கு வந்து மாப்பிளையுடன் தங்கியிருந்த பெண்ணையும் நையப்புடைத்துள்ளனர்.

இச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த விடுதி பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களை வெளியேற்ற பெரும் சிக்கல் பட்டதாகத் தெரியவருகின்றது. பெரும் சிரமத்தின் பின் குறித்த விடுதி அறையில் இருந்து மாப்பிளை மற்றும் மனைவி, இளம் பெண் போன்றவர்களை விடுதி ஊழியர்கள் அகற்றியுள்ளார்கள். 

இச் சம்பவத்தில் விடுதி ஊழியர் ஒருவரும் காயமடைந்துள்ளார். இருப்பினும் இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடுகள் எதுவும் கொடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது. இச் சம்பவத்தால் விடுதியில் தங்கியிருந்த ஏனைய சுற்றுலா பிரயாணிகளும் அதிர்ச்சியடைந்ததாக தெரியவருகின்றது. 

இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை. இதே போல் சில நாட்களின் முன் இன்னொரு சுற்றுலாப்பிரயாணியானியின் திருவிளையாடலால் விடுதி அறை தீப்பிடித்து எரிந்தமை குறிப்பிடத்தக்கது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad