இலங்கையில் காணாமல் போன 1406 வாகனங்கள்.

_*🇱🇰இலங்கையில் 1406 வாகனங்களைக் காணவில்லை!*_

*அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வறுமைக்கு மத்தியில், வாகனத் திருட்டுகள் வேகமாக அதிகரித்து வருவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.*

*இதில் மோட்டார்சைக்கிள் திருட்டுகள் அதிகமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பதிவான மொத்த வாகனத் திருட்டுகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு மட்டும் பதிவான மொத்த எண்ணிக்கையை விட விஞ்சியுள்ளன.*

*2021ஆம் ஆண்டில் மொத்தம் 1,405 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பொலிஸ் துறையில் பதிவாகியுள்ளன.*

*💫இதில் 9 பேருந்துகள்,*

*💫6 வேன்,*

*💫10 லொறி,*

*💫34 கார்,*

*💫353 முச்சக்கர வண்டிகள்,*

*💫975 மோட்டார்சைக்கிள் மற்றும் 18 ஏனைய வாகனங்கள் அடங்கியிருந்தன.*

*இந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரை பதிவான மொத்த வாகனத் திருட்டுகளின் எண்ணிக்கை 1,406 என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.*

*💫12 பேருந்துகள்,*

*💫25 வேன்,*

*💫16 லொறி,*

*💫14 கார்,*

*💫311 முச்சக்கர வண்டிகள்,*

*💫1,016 மோட்டார் சைக்கிள்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.*

*பெரும்பாலான திருட்டுகள் வாகனங்களின் உரிமையாளர்களின் அலட்சியத்தால் நடைபெறுகின்றன என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.*

*வாகன உதிரிபாகங்களின் விலை அதிகரித்துள்ளதால் வாகன திருட்டுகள் அதிகரித்துள்ளன.*

*எனவே வாகன உரிமையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், அனைவரும், தங்கள் வாகனங்களை எளிதில் திருடுவதை தவிர்க்கும் வழிகளை கையாளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.*

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad