22 வயது யுவதிக்கு போன் செய்து நிர்வாண வீடியோ கேட்ட கடவுள்; கன்னித்தன்மையை மீட்க கைவரிசை: மந்திரவாதி புது ‘உருட்டு’!

இழந்த கன்னித்தன்மையை கடவுளின் சக்தியால் மீட்டுத் தருவதாகவும், கடவுள் நிர்வாணப்படம் கேட்பதாகவும் குறிப்பிட்டு, 22 வயது யுவதியை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்ததும், அவரை பணத்திற்காக பிற ஆண்களிடம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் போலி மந்திரவாதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது பிணைக் கோரிக்கையையை கடந்த 11ஆம் திகதி நிராகரித்த மினுவாங்கொடை மாவட்ட நீதிபதி ஹேஷாந்த டி மெல், சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேகநபரான வாரியபொல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே. ஜி.வசந்த அமரசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி ராஜாங்கனை பிரதேசத்தில் வசிப்பவராவார். யுவதியின் தாயும். தந்தையும் பிரிந்து வாழ்கிறார்கள். கணவனிடம் ஜீவனாம்சம் கோரி, யுவதியின் தாய், வாரியபொல நீதிமன்றில் கணவனிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

வழக்கில் கலந்து கொள்வதற்காகவே யுவதி தனது தாயுடன் வாரியபொல நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாயும் சந்தேக நபரும் நீதிமன்றத்தில் நண்பர்களானார்கள். குடும்பத் தகராறுகளை கடவுள் தீர்த்து வைப்பார் என்றும், அதற்கு தான் ஏற்பாடு செய்வதாகவும் தாயிடம் கூறியுள்ளார்.

போலி மந்திரவாதியிடம் ஏமாந்த தயார், 22 வயதுடைய தனது மகளை இளைஞன் ஒருவனால் துஷ்பிரயோகம் செய்த தகவலையும் கூறி, பரிகாரம் கேட்டுள்ளார்.

யுவதி இழந்த கன்னித்தன்மையை தான் மீட்டுத் தருவதாக போலி மந்திரவாதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், மகளின் கையடக்க தொலைபேசி இலக்கத்தையும் தாயாரிடம் கேட்டுள்ளார்.

பின்னர், யுவதியை தொலைபேசியில் அழைத்து பேசிய மந்திரவாதி, யுவதி எவ்வாறு ஆண் நண்பருடன் பாலியல் உறவில் ஈடுபட்டார் என விலாவாரியாக கேட்டுள்ளார்.

அமானுஷ்ய சக்தியை பயன்படுத்தி யுவதியின் கன்னித்தன்மையை மீள தயார் செய்ய முடியுமென்றும், அதற்கு யுவதியின் நிர்வாண வீடியோ ஒன்று அவசியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், நிர்வாண வீடியோவை அனுப்ப யுவதி மறுத்து விட்டார்.

இதனால் கோபமடைந்தவரை போல காட்டிக் கொண்ட போலி மந்திரவாதி, இந்த தொலைபேசி அழைப்பு தன்னிடமிருந்து வந்ததாக நினைக்க வேண்டாம், கடவுள் என்னுடன் இருப்பதால், இது கடவுளின் அழைப்பு என்றும், அந்த நிர்வாண வீடியோவை தான் பார்க்க மாட்டேன் என்றும், கடவுள்தான் பார்ப்பார் என்றும், கடவுள் கேட்டு அதை கொடுக்காவிட்டால் யுவதியும், அவரது குடும்பமும் சீரழிந்து விடும் என மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த யுவதி, தனது நிர்வாண வீடியோவை போலி மந்திரவாதிக்கு அனுப்பியுள்ளார்.

தனது கைத்தொலைபேசியில் யுவதியின் நிர்வாண காணொளிகளை பதிவிறக்கம் செய்த சந்தேக நபர், யுவதிக்கு பொருத்தமான வேலை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கிரியுல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வேலைக்கான நேர்முகத்தேர்வுக்காக யுவதியை அழைத்து செல்வதாக கூறி, அங்குள்ள ஹொட்டல் ஒன்றில் தங்க வைத்து, மிரட்டி பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியுள்ளார். அப்போது யுவதியை வீடியோ படமும் பிடித்துக் கொண்டார்.

தான் சொல்வதை போல நடக்காவிட்டால், அந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய போலி மந்திரவாதி, வேவகெதர பிரதேசத்தில் அறையொன்றை வாடகைக்கு பெற்று, யுவதியை அங்கு தங்க வைத்து, அவர் மூலம் விபச்சாரத்தை ஆரம்பித்தார்.

அறையொன்றில் விபச்சாரம் நடக்கும் தகவலறிந்த போலிசார், யுவதியையும், போலி மந்திரவாதியையும் நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் யுவதி பொலிஸாரிடம் மேற்கண்ட தகவலை கூறியுள்ளார்.

யுவதியை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்திய பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தாயிடம் ஒப்படைக்க பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad