நோர்வேயில் இருந்து யாழ் வந்த மன்மதனால் மாணவி கர்ப்பம்.

நோர்வே நாட்டிலிருந்து கடந்த ஆனி மாதம் யாழ்ப்பாணம் வந்தவரால் அவரது மனைவியின் அக்கா மகள் கர்ப்பமாகியுள்ளார்.

யாழ் சாவகச்சேரிப் பகுதியில் 18 வயது பாடசாலை மாணவியான யுவதி கடந்த சனிக் கிழமை தனியார் கல்வி நிலையத்தில் கற்றுக் கொண்டிருந்த போது வாந்தி எடுத்ததுடன் தலை சுற்றுடன் மயங்கிய நிலைக்கு சென்றுள்ளார்.

உடனடியாக அவரை அப்பகுதியில் உள்ள தனியார் வைத்தியநிலையம் ஒன்றுக்கு கல்வி நிறுவனத்தினர் கொண்டு சென்றதுடன் மாணவியின் தாயாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த வைத்தியர் அவர் கர்ப்பமாக உள்ளார் என தாயாருக்கு தகவல் கூறியுள்ளார். இதனையடுத்து தாயார் மகளை விசாரணைக்கு உட்படுத்திய போதே நோர்வேயிலிருந்து ஓரிரு மாதங்களுக்கு முன் வந்த தனது தங்கையின் கணவரின் செயற்பாட்டை தாயார் அறிந்து அதிர்ந்துள்ளார்.

கணவர் கைவிட்டுச் சென்ற நிலையில் நோர்வேயில் வசித்து வரும் தனது தங்கையின் வீட்டிலேயே மாணவி, மாணவியின் தாயார் மற்றும் இன்னொரு மகனும் வாழ்ந்து வந்துள்ளனர். இந் நிலையில் குடும்பமாக நோர்வேயிலிருந்து வந்த தங்கை மற்றும் தங்கையின் கணவர் , தங்கையின் இரு பிள்ளைகளும் மாணவியின் குடும்பத்துடன் ஒரே வீட்டிலேயே 3 கிழமைகள் தங்கியிருந்துள்ளதாக தெரியவருகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக கல்வி நிறுவன இயக்குனர் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிக்கு அறிவித்தல் கொடுக்க முற்பட்ட போது தாயார் அதனை தடுத்து நிறுத்தியதுடன் குடும்பமாக கொழும்பு சென்றுவிட்டதாக கல்வி நிலையத்தினுாடாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad