யாழ்.நகரில் மனித பாவனைக்கு உதவாத 6 ஆயிரம் கிலோ புளி விற்பனைக்க தயாராகிக் கொண்டிருந்த நிலையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது.
யாழ்.மாநகர பொதுச்சுகாதார பரிசோதகர் சஞ்சீவனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொதுச்சுகாதார பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள களஞ்சியம் ஒன்றில் 6000 கிலோகிராம் வரையான மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை அருவருக்கதக்கவகையில் சுகாதாரமின்றி பொதியிட்டுக் கொண்டிருந்தநிலையில்,
நேற்று மாலை பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவினரால் குறித்த களஞ்சியம் முற்றுகையிடப்பட்டது.