படல்கும்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைகும்புரவத்தை பகுதியில் அதிக மதுபானம் அருந்தியமையால் கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி மாலை அதிகமாக மதுபானம் அருந்திய இருவரும் படல்கும்புர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகன் பொத்துவில் பகுதியில் வசிக்கிறார்.
மகள் அனுப்பும் பணத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான தம்பதி, கடந்த 25ஆம் திகதி அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர்.
வீட்டுக்கு வெளியே சென்ற மனைவி, போதையின் உச்சத்தில் வீதியில் விழுந்து கிடந்துள்ளார். அயலவர்கள் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். அவரது கணவரும் குடிபோதையில் வீட்டிற்குள் படுத்திருந்தார்.
பின்னர் இருவரும் படல்கும்புர பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.