பெலியத்த பிரதேசத்தில் வீடொன்றிற்குள் புகுந்து பெண்ணொருவரை நிர்வாணமாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவரது தங்க நகை மற்றும் பணப்பையை அபகரித்த இரு கொள்ளையர்களை கைது செய்ய பெலியத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மிரிஜ்ஜவில பிரதேசத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பெண், பெலியத்த துனுமடல வத்தையில் தனக்குச் சொந்தமான தோட்டமொன்றுக்கு வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
50 வயதுடைய இந்த பெண் தனது மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்கு வந்துள்ளார். அன்றைய தினம் அவர் தோட்டத்திலுள்ள வீட்டில் தங்கியிருந்ததாகவும், இரவில் கொள்ளையர்கள் அத்துமீறி நுழைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
300,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க நகையை திருடிச் சென்றதாகவும், தனது பணப்பையில் இருந்து 193,000 ரூபாயை எடுத்துச் சென்றதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.