கடந்த யூன் மாதம் யாழில் கோலாகலமாக நடைபெற்ற திருமணம் தற்போது விவாகரத்தில் முடிவடையும் நிலையில் உள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தில் 3ம் வருடம் கற்றுக் கொண்டிருந்த வலிகாமம் பகுதியைச் சேர்ந்த மாணவியை கனடாவில் வசித்து வந்த 30 வயதான இளைஞர் யாழ்ப்பாணம் வந்து திருமணம் முடித்திருந்தார்.
இளைஞனின் தாய் மாணவியின் தாயுடன் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நட்பானவர் என்பதால் திருமணம் எந்தவித தடையும் இன்றி கோலாகலமாக நடந்துள்ளது.
யாழைச் சேர்ந்து முக்கிய அரசியல்வாதி ஒருவரும் அந்த திருமணத்தில் கலந்து சிறப்பித்திருந்தார். திருமணம் முடிந்து இரு மாதங்கள் மனைவியுடன் தங்கியிருந்த பின் கடந்த வாரம் கனடா சென்ற மாப்பிளை தனது தாயாருக்கும், மாமியாருக்கும் தான் தனது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதனால் இரு குடும்பங்களும் கடும் அதிர்ச்சியடைந்தன. விவாகரத்துக்கான காரணம் என்னவென தாயாரால் தனது மகனிடம் காரணம் கேட்ட போது மனைவி குடும்ப வாழ்க்கைக்கு சரிப்பட்டு வரமுடியாத நிலையில் உள்ளார் என மகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தாயாருக்கு சரியான முறையில் விளக்கம் இல்லாத நிலையில் தனது மகனுடன் கடும் சண்டையில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது. அத்துடன் பெண் வீட்டாரும் மணமகனுடன் முரன்பட்டுள்ளனர். இந் நிலையில் மகளிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்குமாறு மருமகன் தனது மாமியாரிடம் கூறியுள்ளார்.
மாமியார் மற்றும் குடும்ப உறவுகள் விவாகரத்து நிலை தொடர்பாக பல்கலைக்கழக மாணவியான குறித்த பெண்ணிடம் விளக்கம் கேட்ட போதும் சரியான விளக்கம் கொடுக்க முடியாது மாணவி அந்தரித்துள்ளார்.
அத்துடன் தனக்கு மாப்பிளை மீது மிகுந்த அன்பு உள்ளதாகவும் சில விடயங்களில் அவர் கடுமையாக நடக்க முற்பட்டதால் தான் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை எனவும் மாணவி கூறியுள்ளார்.
அதன் பின்னர் மாணவியின் சகோதரி மற்றும் குடும்ப உறவுகளின் தீவிர விசாரணையின் போதே மாணவி மாப்பிளைக்கு உடல் உறவு கொள்ள இதுவரை அனுமதிக்கவில்லை என்ற விடயம் தெரியவந்துள்ளது.
அத்துடன் மாணவிக்கு உடலுறவு கொள்வதில் கடும் அச்சம் ஏற்பட்ட நிலையிலேயே மாணவி அதற்கு அனுமதிக்கவில்லை என குடும்ப உறவுகள் அறிந்துள்ளன. இவ்வாறான நிலையில் யாழில் உள்ள பிரபல பெண்ணியல் மருத்துவரை அவர்கள் அணுகியுள்ளதாகவும் இது தொடர்பாக மாப்பிளைக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாப்பிளையின் நெருங்கிய நட்புக்கள் ஊடாக தகவல்கள் வெளியாகியுள்ளன.