அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது. இப்போட்டி இன்று (24.11.2022) கொழும்பு களணிய பிரதேசசபை மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் பொலனறுவை பன்டிவெவ மகா வித்தியாலயத்துடன் மோதிய மகாஜனா 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகயது. இரண்டு கோல்களையும் அணித்தலைவி லயன்சிகா முதல்பாதி ஆட்டநேரத்தில் உதைத்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.