வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வணவுணதீவு பிரதேசத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் (29) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4ம் குறுக்கு வீதி வவுணதீவு பிரதேசத்தைச்சேர்ந்த (19) வயதுடைய கணேசலிங்கம் விதுஷயா என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்தவராவார்.
கா.பொ.த. உயர் தரத்தில் மட்டக்களப்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி கற்று வரும் மாணவி சம்பவ தினத்தன்று ஆலயம் ஒன்றுக்கு வழிபாட்டுக்கு போவதாக கூறிவிட்டு பின்னர் தான் போவதில்லை என தாயாரிடம் கூறிய நிலையில் தாயார் வேலையின் நிமிர்த்தம் வெளியில் சென்று வீடு திரும்பியபோது மாணவி தனது கற்கை அறையில் தூக்கிட்டிருந்தாகவும் பின்னர் தூக்கிலிருந்து மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் குறித்த மாணவி அதே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை வீட்டாரின் சம்மதத்துடன் காதலித்து வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் அவர்களின் உத்தரவிற்கமைவாக மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டார். பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.