யாழ் குருநகரில் 40 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது.

யாழ்.குருநகர் கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய திடீர் சோதனையின்போது இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட சுமார் 40 கிலோ கஞ்சா கடற்படையினால் இன்று அதிகாலை மீட்கப்பட்டிருக்கின்றது, 

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை கடத்தி வந்த குற்றச் சாட்டின் பெயரில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதேநேரம் கஞ்சாவை கடத்தி வரப் பயன்படுத்தப்பட்ட படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு பிடிக்கப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபரை பொலிஸார் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad