கப்பலிலிருந்து மீட்கப்பட்டடோரில் 76 பேர் யாழ். மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

கனடாவுக்கு செல்வதாக அழைத்து செல்லப்பட்டு வியாட்நாம் கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கை அகதிகளை அடையாளம் காணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகளால் உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது என வியாட்நாமிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் சில தினங்களில் சர்வதேச நிறுவனம் ஒன்றிடம் கையளிக்க படுவார்கள் என்றும் பின்னர் நிறுவனத்தின் ஊடாக இலங்கை அரசிடம் கையளிக்கப்படுவார்கள்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ‼️

இதேவேளை  மீட்கப்பட்ட இலங்கையர்களில் அதிகமானவர்கள்  யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் சுற்றுலா விசாவில் தாய்லாந்து மற்றும் மலேசியாவிற்கு விமானம் மூலம் சென்றுள்ளனர்கள். பின் கப்பல் மூலம் வேறொரு நாட்டுக்கு செல்வதற்காக பயணித்துள்ளதாகவும்,  படகில் ஏறுவதற்கு முன் ஆட்கடத்தல்காரர்களுக்கு பல இலட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளனர்.










Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad