இலங்கையர்களுடன் கப்பல் மூழ்கிய தகவலையறிந்த மறுநிமிடமே, அதில் பயணித்த இளைஞன் ஒருவரின் காதலும் மூழ்கிய சம்பவம் நடந்துள்ளது.
குறிப்பிட்ட இளைஞனிற்கு, தனது மைத்துனி மீது காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், மைத்துனி காதலை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. இளைஞனிற்கு நிரநதரமான வேலை இல்லையென்பதால், அவர் காதலை ஏற்கவில்லையென கூறப்படுகிறது.
இதையடுத்து, காதலியை திரும்பிப் பார்க்க வைப்பதற்காக “வெளிநாட்டு மாப்பிள்ளை“ ஆவதற்காக அந்த படகில் இளைஞனும் பயணித்துள்ளார்.
ஒக்ரோடபர் 8ஆம் திகதி படகு பயணத்தை ஆரம்பித்ததும், அந்த தகவல் கப்பலில் பயணித்தவர்களின் குடும்பத்தினர், உறவுகளிற்கு இடையில் பரவியிருந்தது.
இந்த தகவலை அறிந்ததும், காதலியின் பெற்றோர் , அடுத்தடுத்த நாளில் மோதகத்துடன் இளைஞனின் வீட்டிற்கு சென்றுள்ளார்கள்.
என்றாலும், கப்பல் சிக்கிய தகவல் அறிந்த பின்னர், இளைஞனின் குடும்பத்தாரின் தொலைபேசி அழைப்புக்களிற்கே பதிலளிப்பதில்லையென குறிப்பிடப்படுகிறது.