மின் கட்டணம் செலுத்தாமையால் ஈ.பி.டி.பி கட்சியின் தலைமமை அலுவலகம் இயங்கிய ஸ்ரீதர் தியேட்டரின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மின்சார சபை ஊழியர்களால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையால், கட்சியின் தலைமை அலுவலகம் இருளில் மூழ்கி இருக்கிறது.
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன்னரனான மின் கட்டண நிலுவை தொகை மற்றும் அதற்கான அபராத தொகை போன்றவை செலுத்தப்படவில்லை என்றே மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை 1990 ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு முதல் ஸ்ரீதர் தியேட்டர் விடுதலைப்புலிகளின் திரையரங்காக செயற்பட்ட நிலையில் பின்னர் இராணுவத்தின் பாவனையில் இருந்த நிலையில் எமது கட்சியினால் பொறுப்பேற்கப்பட்டது.
அக்கால பகுதியில் இங்கிருந்தே அயல் பிரதேசங்கள் மற்றும் நாக விகாரை என்பவற்றுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மின்சார பாவனை மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் ,
மின்மானி வாசிப்பு அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட்டு நிலையில், 2014ஆம் ஆண்டு புதிய மின்மானி மாற்றப்பட்டது. அதன் பின்னர் ஒழுங்காக முறையில் மின் கட்டணத்தை செலுத்தி வருகிறோம் என்றனர்.
அதேவேளை , சுன்னாகத்தில் உள்ள தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரின் உறவினரின் எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் மின் கட்டணம் செலுத்ததால் , அவர்களுக்கு மின் துண்டிப்பு செய்யப்பட்டபோது,
தமது அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி ஓரிரு மணித்தியாலத்தில் மின்சாரம் மீள வழங்கப்பட்டது. ஆனாலும் அமைச்சரவை அந்தஸ்து உள்ள கடற்தொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ள போதிலும்,
அமைச்சர் தனது அரசியல் செல்வாக்கினையோ பலத்தினையோ பயன்படுத்த விரும்பவில்லை என்பதால் தமது கட்சி அலுவலகம் இருளில் மூழ்கிய நிலையில் காணப்படுத்தாக மேலும் தெரிவித்தனர்.